இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதும்; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியே வெல்லும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதும்; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 2

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த சில தினங்களில் உள்ள துவங்க உள்ள நிலையில், இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல முடியுமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இது குறித்தான தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதும்; முன்னாள் வீரர் நம்பிக்கை !! 3

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், ““காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்த முடியாத அணியாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும். ரஹானே தலைமையிலான இந்திய அணியால் அதை செய்யவும் முடியும். இந்தியா இந்த தொடரை வென்றால் அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1 – 1 என்ற சமநிலையில் உள்ளது. காபா மைதானத்தில் இந்த தொடரின் கடைசி போட்டி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *