மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளம் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் கருத்து தெறிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதில் கிராலி அடித்த 53 ரன்கள் தான் அதிகபட்சமாக இருக்கிறது.

"உண்மையில் இது 5 நாள் டெஸ்ட் ஆடுகளம் அல்ல" முன்னாள் வீரரின் பரபரப்பு கருத்து ! 2

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது. இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி  30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் ரோகித் சர்மா 25 ரன்களும் சுப்மன் கில் 15 ரன்களும் குவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.

அது எப்படி ?....இங்க தான் ரோகித் & கிராவ்லி அரைசதம் அடிச்சுருக்காங்க ! - கடுப்பில் இந்திய ஜாம்பவான் 2

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் கூறுகையில் “நான் இந்த ஆடுகளத்தை குறை சொல்லவில்லை. ஆனா இந்த ஆடுகளம் பேட்ஸ்மன்களின் பொறுமை, நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றி யோசிக்க வைக்கிறது. அப்படி இருந்தும் இந்திய பேட்ஸ்மன் ரோகித் சர்மா மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மன் ஜாக் கிராவ்லி இருவரும் அரை சதம் விளாசி இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார். 

அது எப்படி ?....இங்க தான் ரோகித் & கிராவ்லி அரைசதம் அடிச்சுருக்காங்க ! - கடுப்பில் இந்திய ஜாம்பவான் 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *