மூன்றாவது போட்டியில் இந்திய அணி வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் ; ரெய்னா நம்பிக்கை !! 1
மூன்றாவது போட்டியில் இந்திய அணி வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் ; ரெய்னா நம்பிக்கை

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் ; ரெய்னா நம்பிக்கை !! 2

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நாளை துவங்குகிறது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணி வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கும் ; ரெய்னா நம்பிக்கை !! 3
South African bowler Lungi Ngidi (C) and teammates celebrates the dismissal of Indian batsman Parthiv Patel (not in picture) during the second day of the second Test cricket match between South Africa and India at Supersport cricket ground on January 14, 2018 in Centurion, South Africa. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

இந்நிலையில் இந்த போட்டி குறித்தும் இந்த தொடர் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா, மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, “தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த தொடரை பொறுத்த வரையில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது. குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஹர்திக் பாண்டியாவும், புவனேஷ்வர் குமாரும் பட்டையை இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.