சிக்ஸரில் புதிய சரித்திரம் படைத்தார் சுரேஷ் ரெய்னா..!! 1

சிக்ஸரில் புதிய சரித்திரம் படைத்தார் சுரேஷ் ரெய்னா..

வங்கதேச அணிக்கு எதிரான நேற்றை டி.20 போட்டி மூலம் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம்  ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இலங்கை அணியுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்றைய  போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.

இதில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான் 55 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிக்ஸரில் புதிய சரித்திரம் படைத்தார் சுரேஷ் ரெய்னா..!! 2

இந்த போட்டியில் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி.20 அரங்கில் 50 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச டி.20 அரங்கில் அதிக சிக்ஸர்கள் விளாசியுள்ள டாப் 5 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

5., கோஹ்லி;

இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பாதையில் கம்பீரமாக வழிநடத்தி வரும் விராட் கோஹ்லி, இதுவரை டி.20 அரங்கில் இந்திய அணிக்காக 41 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

4., தோனி;

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனான தோனி, இதுவரை டி.20 அரங்கில் மொத்தமே 2 அரைசதங்கள் தான் அடித்திருந்தாலும் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 46 சிக்ஸர்கள் அடித்து 4ம் இடத்தில் உள்ளார்.

3., ரெய்னா;

நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த சுரேஷ் ரெய்னா, நேற்றைய போட்டி மூலம் மொத்தம் 50 சிக்ஸர்கள் அடித்து இந்த வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா;

ஹிட்மேன் என்று அழைக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் ரொஹித் சர்மா, இதுவரை மொத்தம் 69 சிக்ஸர்கள் அடித்து இந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

யுவராஜ் சிங்;

கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் யுவராஜ் சிங் தவித்து வந்தாலும், இவரின் அதிரடி ஆட்டம் பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை. இவரே அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 74 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *