இந்த பையன் தான் உங்க டிவில்லியர்ஸ்... இந்த இடத்தில் மட்டும் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ரிக்கி பாண்டிங் !! 1

இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் சூர்யகுமார் யாதவை இந்திய அணி நான்காவது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

பல வருடமாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த வருடம் இந்திய அணியிலும் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

இந்த பையன் தான் உங்க டிவில்லியர்ஸ்... இந்த இடத்தில் மட்டும் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ரிக்கி பாண்டிங் !! 2

இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செய்து கொடுத்து வரும் சூர்யகுமார் யாதவ், விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரில் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்குபவரான சூர்யகுமார் யாதவிற்கு, துவக்க வீரராக களமிறங்குவது செட்டாகது இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே அழித்துவிடும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசிய நிலையில், சூர்யகுமார் யாதவோ மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

பல வருடமாக இந்திய அணியில் நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனை, சூர்யகுமார் யாதவ் மூலம் ஓரளவிற்கு சரியாகி உள்ளதால், ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த பையன் தான் உங்க டிவில்லியர்ஸ்... இந்த இடத்தில் மட்டும் இவரை களமிறக்குங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ரிக்கி பாண்டிங் !! 3

இந்தநிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், சூர்யகுமார் யாதவை 4வது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் அனைத்து திசைகளிலும் அடித்து விளையாடக்கூடிய 360 டிகிரி வீரர். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை போன்று இருக்கும். அவரால் அனைத்து திசைகளிலும் மிக சிறப்பாக விளையாட முடியும். சுழற்பந்து வீச்சானாலும், வேகப்பந்து வீச்சானாலும் சூர்யகுமார் யாதவால் அசால்டாக அடித்து விளையாட முடியும். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலம் சேர்த்து வருகிறார். துவக்க வீரராக களமிறக்கினாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடுவது அவரது தனிச்சிறப்பு, ஆனால் என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவை 4வது இடத்தில் களமிறக்குவதேச சரியானதாக இருக்கும். மிடில் ஆர்டரில் களமிறங்கினால் அவரால் நீண்ட நேரம் தாக்குபிடித்து, போட்டியின் இறுதி வரை களத்தில் இருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published.