அது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு

இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கான ஸ்பான்சர்சிப் ஒப்பந்தத்தில் இருந்து விவோ நிறுவனம் விலகியதால் ஐ.பி.எல் தொடருக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என பி.சி.சி.ஐ, தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடரானது, செப்டம்பர் மாதம் அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டும் என பி.சி.சி.ஐ., கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

அது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு !! 2

ஏற்கனவே பல எதிர்புகள், பல சிக்கல்களை தாண்டி பி.சி.சி.ஐ., இத்தகையை முடிவை எடுத்த பிறகு, புதிய பிரச்சனையாக இந்த வருடத்திற்கான ஸ்பான்சர்சிப்பில் இருந்து விலகி கொள்வதாக விவோ நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவோ நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் பி.சி.சி.ஐ.,க்கு 400 கோடி வரை இழப்பு ஏற்படும் என கூறப்படும் நிலையில், இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி ஓபனாக பல விசயங்கள் பேசியுள்ளார்.

இது குறித்து கங்குலி பேசியதாவது; நான் இதை நிதி நெருக்கடி என்று கூற மாட்டேன். இது ஒரு சிறிய குறைபாடு மற்றும் தொழில் ரீதியாக வலுவாக இருப்பதன் மூலம் அதை குறிப்பிட்ட காலத்தில் மீட்டு எடுக்கக்கூடிய வழியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது ஒன்னும் அவ்வளவு பெரிய பிரச்சனை கிடையாது; தாதா கங்குலி அதிரடி பேச்சு !! 3

பெரிய விசயம் ஒரே நாள் இரவில் வந்து விடாது. அதேபோல் ஒரேநாள் இரவில் பெரிய விசயம் நம்மை விட்டு விலகிச் சென்று விடாது. பிசிசிஐ வலிமையான பவுன்டேசன் கொண்டது. விளையாட்டு, அதிகாரிகள் கடந்தகாலத்தில் மிகவும் வலிமையாக உருவாக்கி வைத்துள்ளார்கள். பிசிசிஐ-யிடம் இந்த சறுக்கலை எதிர்கொள்ளும் திறன் உள்ளது’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *