புதிய மைல்கல்லை எட்டினார் ஹிட்மேன் ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 100 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஐந்து போட்டிகள் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், நேற்றைய போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

நேற்றைய போட்டியில் 52 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் அரங்கில் 8000 ரன்களை பூர்த்தி செய்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8000+ ரன்களை  மிக வேகமாக கடந்த வீரர்கள் பட்டியலில்  விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸுக்கு  அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்து, முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த இன்னிங்ஸில் 8000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்;

விராட் கோஹ்லி – இந்தியா – 175 இன்னிங்ஸ்

ஏ.பி.டிவில்லியர்ஸ் – தென் ஆப்ரிக்கா – 182 இன்னிங்ஸ்

சவுரவ் கங்குலி – இந்தியா – 200 இன்னிங்ஸ்.

ரோஹித் சர்மா – இந்தியா – 200 இன்னிங்ஸ்



  • SHARE

    விவரம் காண

    யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

    12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

    ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

    மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

    ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...