வீடியோ; நம்ம வச்சு குறி எப்பவும் தப்பாது; ஸ்டார்க்கை மிரளவிட்ட நடராஜன் !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டியில் தனது துல்லியமான யார்கரால், ஸ்டார்க்கின் விக்கெட்டை தமிழக வீரர் நடராஜன் வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்டி இன்று நடைபெற்றது.

வீடியோ; நம்ம வச்சு குறி எப்பவும் தப்பாது; ஸ்டார்க்கை மிரளவிட்ட நடராஜன் !! 2

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிஆர்கி ஷாட் 34 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஹென்ரிக்ஸை (30) தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

வீடியோ; நம்ம வச்சு குறி எப்பவும் தப்பாது; ஸ்டார்க்கை மிரளவிட்ட நடராஜன் !! 3

வீடியோ;

இந்த போட்டியின் மூலம் இந்திய டி.20 அணிக்கு அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் தனது முதல் போட்டியிலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கும் கை கொடுத்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுள்ளது. முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் நடராஜனை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர். அதே போல் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழும் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க்கின் விக்கெட்டை தனது துல்லியமான பந்துவீச்சு மூலம் நடராஜன் வீழ்த்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யார்கர் பந்துவீச்சிற்கு பெயர் போன ஸ்டார்க்கையே தனது யார்க்கரால் நடராஜன் திணறடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *