ஒரு இந்திய வீரருக்கு இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக் !! 1

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக், நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.

இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதியது.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக் !! 2

உலக சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை ஈசியாக வீழ்த்தி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தங்களது சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக் !! 3

அந்தவகையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக்கும், நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது அணியின் கேப்டனாகவும், துவக்க வீரராகவும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், மற்றொரு துவக்க வீரராக டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் மிட்செல் மார்ஸ், மார்க்ரம் ஆகியோரை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட்டை தேர்வு செய்துள்ளார்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரசீத் கான், டிரண்ட் பவுல்ட், ஹசில்வுட் ஆகியோரை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், இந்திய அணியின் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கும் தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளார்.

தீப்தாஸ் குப்தா போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் சிலரே தங்களது ஆடும் லெவனில் ஒரு இந்திய வீரருக்கு கூட இடம் கொடுக்காத நிலையில், பிராட் ஹாக் மட்டும் தான் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராட் ஹாக் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;

பாபர் அசாம் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், மார்க்ரம், மேத்யூ வேட், ஆசிப் அலி, ரசீத் கான், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், டிரண்ட் பவுல்ட், ஜாஸ் ஹசில்வுட், ஆடம் ஜம்பா.

Leave a comment

Your email address will not be published.