அவரே இல்ல... பாவம் என்ன செய்ய போறாங்களோ..? நியூசிலாந்து அணியை நினைத்து பரிதாபப்படும் ஆரோன் பின்ச் !! 1

காயம் காரணமாக டீவன் கான்வே இறுதி போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து விலகியிருப்பது நியூசிலாந்து அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை கொடுக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

அவரே இல்ல... பாவம் என்ன செய்ய போறாங்களோ..? நியூசிலாந்து அணியை நினைத்து பரிதாபப்படும் ஆரோன் பின்ச் !! 2

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச், நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான டீவன் கான்வே விலகியுள்ளது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அவரே இல்ல... பாவம் என்ன செய்ய போறாங்களோ..? நியூசிலாந்து அணியை நினைத்து பரிதாபப்படும் ஆரோன் பின்ச் !! 3

இது குறித்து ஆரோன் பின்ச் பேசுகையில், “டீவன் கான்வே நியூசிலாந்து அணியின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களில் டீவன் கான்வேவும் ஒருவர். கான்வே இல்லாமல் களமிறங்க உள்ளது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நியூசிலாந்து அணி திறமையான அணி. கான்வே இடத்தில் யாரை களமிறக்கினாலும் அதுவும் எங்களுக்கு சவாலாக தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

அவரே இல்ல... பாவம் என்ன செய்ய போறாங்களோ..? நியூசிலாந்து அணியை நினைத்து பரிதாபப்படும் ஆரோன் பின்ச் !! 4

மேலும் பேசிய ஆரோன் பின்ச், “என்னை பொறுத்தவரையில் டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விசயம் கிடையாது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நான் டாஸை இழக்க வேண்டும் என்று தான் நினைத்தேன், முதலில் பேட்டிங் செய்து அதிகமான ரன்கள் குவித்து அதன் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இறுதி போட்டியிலும் என எண்ணம் இதுவே. டாஸை இழந்துவிட்டால் போட்டியில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அர்த்தம் இல்லை. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இதே மைதானத்தில் தான் நடைபெற்றது, இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகமான ரன்களை குவித்துவிட்டு அதன் மூலம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்து அதிகமான ரன்கள் குவித்துவிட்டால் போதும் எதிரணிக்கு தானாக அதிக நெருக்கடி ஏற்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.