டி.20 உலகக்கோப்பை; அயர்லாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நெதர்லாந்து !! 1

டி.20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான அயர்லாந்து அணியில் கெவின் ஓ பிரையன், பவுல் ஸ்ட்ரீங் போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ள்ளனர். அதே போல் சிமி சிங், மார்க் அடைர் போன்ற வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் நெதர்லாந்து அணியில், மேக் ஓடோட், பென் கூப்பர், ரியான் டின் டோஸ்கேட், பீட்டர் சீலர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான நெதர்லாந்து அணி;

மேக்ஸ் ஓடோட், பென் கூப்பர், பாஸ் டி லீடி, காலின் அக்வெர்மன், ரியான் டென் டோஸ்கேட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர்), ரோலிஃப் வான் டெர் மெர்வே, பீட்டர் சீலர் (கேப்டன்), லோகன் வான் பெக், ஃபெரட் க்லாசன், பிராண்டன் க்ளோவர்.

இன்றைய போட்டிக்கான அயர்லாந்து அணி;

பவுல் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரியூ பல்பிர்னே (கேப்டன்), கிரத் டிலேனே, ஹாரி டெக்டர், கர்டிஸ் சாம்பர், நீல் ராக் (விக்கெட் கீப்பர்), சிமி சிங், மார்க் அடைர், பென்ஞமின் வைட், ஜோசுவா லிட்டில்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *