இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சவுரவ் கங்குலி உறுதி !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியே வெல்லும் என முன்னாள் இந்திய வீரரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சவுரவ் கங்குலி உறுதி !! 2

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலியா நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும், பிசிசிஐ.,யின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, நியூசிலாந்து அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதி போட்டியில் இந்த அணி தான் வெல்லும்; சவுரவ் கங்குலி உறுதி !! 3

இது குறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், “நியூசிலாந்து அணி சமீபகாலமாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது நியூசிலாந்து அணிக்கான காலம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நியூசிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்திய டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலிய அணியும் வலுவானது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் என்னை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு கூடுதலாக உள்ளது. நியூசிலாந்து மிக சிறிய நாடு தான் ஆனால் அவர்களின் விளையாட்டு பயமே இல்லாமல் உள்ளது இதன் மூலமே நியூசிலாந்து அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *