அவர் இல்லாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்...இந்த அணி தான் சாம்பியன் ; விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆரூடம் !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் இந்திய வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

அவர் இல்லாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்...இந்த அணி தான் சாம்பியன் ; விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆரூடம் !! 2

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மன், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

அவர் இல்லாம ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்...இந்த அணி தான் சாம்பியன் ; விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆரூடம் !! 3

இது குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் பேசுகையில், “இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே பலமானது. ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளதாக கருதுகிறேன். நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான டீவன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுக்கும். கடந்த கால வரலாறுகளை வைத்து பார்த்தாலும் ஆஸ்திரேலிய அணிக்கே வாய்ப்புகள் என் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.