ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

எதிர்வரும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் இந்த 11 வீரர்களை ஆடும் லெவனில் தேர்ந்தெடுத்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 2

கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு, நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் மிகவும் உதவியாக இருந்தது.ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 3

இந்த நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்த வீரர்களை தேர்ந்தெடுத்தால் இந்திய அணி பலமான அணியாக இருக்கும் என்பது குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார்.

ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 4

அதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களாக ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதில் விராட் கோலி குறித்து இர்பான் பதான் பேசுகையில், “சமீபத்தில் விராட் கோலி எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 5

4 மற்றும் 5வது இடத்தில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்துள்ளார்.மேலும் இவரகளை தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மாற்றும் ஹர்திக் பாண்டியாவையும், விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

 

மேலும் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஹர்ஷல் பட்டேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரை இர்பான் பதான் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் தேவை இல்லை... டி.20 உலகக்கோப்பைக்கான தரமான ஆடும் லெவன் இது தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 6

இர்பான் பதான் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்…

 

ரோகித் சர்மா (c), விராட் கோலி, கே எல் ராகுல்,, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், சஹால்.

 

 

Leave a comment

Your email address will not be published.