ரிஷப் பண்ட்டை விட இந்த பையன் சிறந்த வீரர்... தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

பழக்கத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்காமல் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய அணியின் தேர்வை டேனிஷ் கணேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

செப்டம்பர் 12ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட பட்டியலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ராகுல் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 16 டி20 போட்டிகளில் 250க்கும் குறைவான ரன்களை அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். மேலும் இவரது சராசரி மிகவும் குறைவாக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் போதிய அளவிற்கு இல்லை என்பதால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

ரிஷப் பண்ட்டை விட இந்த பையன் சிறந்த வீரர்... தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்காமல் வெளியேற்றுகிறது. ஆனால் ஃபார்மில் இல்லாத கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்றோருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறது. சஞ்சு சாம்சன் போன்ற திறமை வாய்ந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ பாலிடிக்ஸ் காரணமாக சீரழித்து வருகிறது என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட ஒரு வார காலம், இவரை ஏன் எடுக்கவில்லை? என்பது பற்றிய பேச்சுக்களே நிலவி வந்தன. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார்.

வெள்ளிக்கிழமை அன்று இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் ரசிகர்கள் கொடுத்த பெரும் அழுத்தத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று டேனிஷ் கணேரியா கருத்து தெரிவித்திருந்தார்.

ரிஷப் பண்ட்டை விட இந்த பையன் சிறந்த வீரர்... தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இந்த நிலையில் பழக்கத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்காமல் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சஞ்சு சாம்சன், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து டேனிஷ் கணேரியா மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “இந்திய அணி திறமையின் அடிப்படையில் அணி வீரர்களை தேர்வு செய்யாமல் நட்பின் அடிப்படையில் தேர்வு செய்வதை வழக்கமாக வைத்துள்ளது, ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர் போல் தெரியவில்லை, அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு பொருத்தமானவர், ரிஷப் பண்டிற்கு பதில் சஞ்சு சாம்சன் நல்ல தேர்வாக இருந்திருப்பார். கடந்த சில போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் அணியில் தேவையில்லாத ஒரு வீரராக உள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் அணியில் இருந்த போதும் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை, சஞ்சு சாம்சன் தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சாம்சன் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலிய மைதானம் சுஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்ய ஏதுவாக உள்ளது, ரிஷப் பண்ட் சிறந்த வீரர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் தற்போதைய நிலையில் அவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கக் கூடாது ”என்று டேனிஷ் கணேரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.