மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 2

இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில் நியூசிலாந்து அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான டீவன் கான்வே, காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக டிம் செய்பர்ட் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அணியில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இறுதி போட்டிக்கான நியூசிலாந்து அணி;

மார்டின் கப்தில், டாரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டிம் செய்ஃபர்ட், கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரண்ட் பவுல்ட்.

இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மிட்செல் மார்ஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் ஹசில்வுட்.

Leave a comment

Your email address will not be published.