தமிழக காவல் துறையை பாராட்டிய சுரேஷ் ரெய்னா: காரணம் இதுதான் 1

திருப்பத்தூரில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், அதன்மீது போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து புகார் தாரரிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையை அம்மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தொடங்கியுள்ளார்.

புகார் தாரர் கூறும் கருத்தின் அடிப்படையில் வழக்கைக் கையாண்ட போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள் அல்லது முறையான அறிவுரைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பிலிருந்து ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கூறுகையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு முறையாக புகார் ஏற்கப்பட்டதா? அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று அவர்களிடம் கருத்து கேட்கப்படும்.தமிழக காவல் துறையை பாராட்டிய சுரேஷ் ரெய்னா: காரணம் இதுதான் 2

புகார் அளித்தவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் குடிமக்கள் மீதான போலீசாரின் பொறுப்பும், அக்கறையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னா, “திருப்பத்தூர் காவல்துறையின் இந்தத் திட்டம் ஒரு பிரமாதமான தொடக்கம். இது கண்டிப்பாக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், குடிமகன்களுக்காக அவர்கள் பொறுப்புடன் செயல்படுவதையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

ரெய்னாவின் இந்தப் பாராட்டு நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

33 வயதான ரெய்னா இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 36 அரைசதம் உள்பட 5,615 ரன்கள் சேர்த்துள்ளார். 78 இருபது ஓவர் ஆட்டம், 18 டெஸ்டுகளிலும் ஆடியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தேர்வாளர்கள் மீது குற்றம் சாட்டிய ரெய்னா, அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை. அத்துடன் சீனியர் வீரர்கள் விஷயத்தில் தேர்வாளர்கள் கூடுதல் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். என்னிடம் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சுட்டிகாட்டினால் தானே சரி செய்ய முடியும். அது என்னவென்றே தெரியாத போது எப்படி முன்னேற்றம் காண முடியும் என்றும் ரெய்னா கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பதவிகாலத்தை நிறைவு செய்த முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் ரெய்னா விவகாரம் குறித்து நேற்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-தமிழக காவல் துறையை பாராட்டிய சுரேஷ் ரெய்னா: காரணம் இதுதான் 3
வி.வி.எஸ்.லட்சுமணன் 1999-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கி 1,400 ரன்கள் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அணிக்கும் திரும்பினார். அணியை விட்டு கழற்றி விடும் போது, மூத்த வீரர்களிடம் இருந்து நாங்களும் அதைத் தான் (உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவது) எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளூர் போட்டிகளில் அத்தகைய அபார ரன் குவிப்பை நாங்கள் பார்க்கவில்லை. அதே சமயம் மற்ற இளம் வீரர்கள் முதல்தர போட்டி மற்றும் இந்திய ‘ஏ’ அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *