இந்தியாவின் முதல் தரப் போட்டியான ரஞ்சிக் கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 4 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகளாக பிரிக்கப்பட்டு ஆடப்பட்டு வருகிறது. லீக் சுற்றில் மொத்தம் 6 போட்டிகளில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் 3 போட்டிகளில் விளையாடிவிட்டது.

Photo by Ron Gaunt/BCCI//SPORTZPICS
தமிழக அணி அடுத்ததாக ஒடிசா அணியுடன் ஆடவுள்ளது. இந்த போட்டிகான தமிழக அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முரளி விஜய் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மலோலன் ரங்கராஜன் மற்றும் லக்ஸ்மனன் ஆகியோர் தமிழக அணிக்க அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் முதல் சில போட்டிகளில் அணியின் லெவனில் ஆடாத பாப அபாரஜித்திற்கு லெவனில் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

நியூசிலாந்து அணியுடனான டி20 தொடர் முடிந்தவுடன் நவம்பர் 16ஆம் தேதி முதல் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் அஷ்வின் மற்றுன் முரளி விஜய் ஆகியோரின் பெயர் உள்ளது. இதன் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அதனால் தமிழக அணியில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அணி சி பிரிவில் உள்ள ஏழு அணிகளில் 3ஆவது இடத்தில் உள்ளது. ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் ட்ரா செய்துள்ளது. தற்போது அடுத்த போட்டி ஓடிசாவுடன் கட்டக்கில் நடைபெறுகிறது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்க்காக இன்னும் சில தினங்களில் இந்தியா வரவுள்ளது இலங்கை அணி. டெஸ்ட் தொடர் 16ஆம் தேதி துவங்கும் முன் ஒரு மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது இலங்கை அணி.
இதற்கு முன், பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்ற பெற்ற இலங்கை அணி, அந்த அணியுடனான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி என அனைத்தையும் தோல்வியடைந்து பரிதாபத்துடன் இந்தியா வருகிறது.
இந்தியா-இலங்கைத் தொடரின் போட்டி அட்டவணை:
டெஸ்ட் தொடர்
- முதல் போட்டி, நவ்.16-20, கொல்கத்தா
- இரண்டாவது போட்டி, நவ்.24-28, நாக்பூர்
- மூன்றாவது போட்டி, டிசம்.02-06, டெல்லி
ஒருநாள் தொடர் அட்டவணை :
- முதல் ஒருநாள் போட்டி, டிசம்.10, தர்மசாலா
- இரண்டாவது போட்டி, டிசம்.13, மொஹாலி
- மூன்றாவது போட்டி, டிசம்.17, விசாகப்பட்டினம்
டி20 தொடர் அட்டவணை :
- முதல் டி20 போட்டி, டிசம்.20, கட்டாக்
- இரண்டாவது டி20 போட்டி, டிசம்.22, இந்தூர்
- மூன்றாவது டி20 போட்டி, டிசம்.24, மும்பை