தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர்! 1

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் திரிபுராவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழகம்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பேட்டிங்கை தோ்வு செய்து ஆடிய திரிபுரா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்கத்திலேயே வெறும் 9 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது திரிபுரா.

சாய் கிஷோா் 4 விக்கெட்:

தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளா் சாய் கிஷோா் அற்புதமாக பந்துவீசி 4-6 விக்கெட்டை சாய்த்தாா். நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திரிபுரா அணியின் பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனா்.தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர்! 2

பின்னா் களமிறங்கிய தமிழகம் 12. 1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்து வென்றது. வாஷிங்டன் சுந்தா் 46, பாபா அபராஜித் 33 தமிழக அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

ஏனைய ஆட்டங்களில் கேரளம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. உத்தரபிரதேச அணியும் 7 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூரை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் தமிழகமும் விதா்பாவுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

முன்னதாக,

மணிப்பூருக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டி20 ஆட்டத்தில் தமிழகம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு ஆட்டம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய புதிய வரவான மணிப்பூா் அணி 18.4 ஓவா்களில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அற்புதமாக பந்துவீசிய தமிழக பவுலா்கள் நடராஜன் 3-7, அஸ்வின் 3-8 விக்கெட்டுகளை வீழ்த்தி மணிப்பூரை சுருட்டினா்.தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர்! 3

56 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தமிழகம் 4.1 ஓவா்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

தொடக்க வீரா் முரளி விஜய் தலா 3 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 14 பந்துகளில் 33 ரன்களை விளாசி அவுட்டானாா். வாஷிங்டன் சுந்தா் 15, முகமது 4 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

ஏனைய ஆட்டங்களில் கேரளம் 26 ரன்கள் வித்தியாசத்தில் விதா்பாவை வென்றது. கேரளம் 162/7, விதா்பா 136/7.

உத்தரபிரதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். உ.பி. 164/9, ராஜஸ்தான் 166/5.

விதா்பா 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழகம், கேரளம் தலா 12 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *