இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் - அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர் 1

இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் – அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர்

இங்கிலாந்து அணி சென்ற 2015 உலகக்கோப்பை தொடரில் இருந்து மீண்டு வந்து ஒரு புத்தம் புதிய அற்புதமான அணியை கட்டமைத்துள்ளதாக முன்னால் வீரர் ஜேம்ஸ் டெய்லர் கூறியுள்ளார்.

சேனர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியால் நாக் அவுட் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியே தள்ளப்பட்டது இங்கிலாந்து அணி. அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஒரு அசுரத்தனமான அணியாக உருவெடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் - அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர் 2
Taylor, who was forced to retire in 2016 because of a serious heart condition, was part of England’s squad which failed to make it past the group stage at CWC15 three years ago.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கிரிகட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜேம்ஸ் டெய்லர். தற்போது 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அற்புதமான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

2015 உலகக்கோப்பை அதிர்ச்சி தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி சரியான பாடத்தை கற்றுக்கொண்டுள்ளது. மேலும், ஒரு அற்புதமான அணியை கட்டமைத்துள்ளது.

இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் - அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர் 3
“We’re the No. 1 ranked side in the world and we’ve learnt so much from all the disappointments of 2015, and I think that’s why England cricket is the force it is at the minute.”

இதனால் தற்போது இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல ஒரு மிகப்பெரிய வாய்ப்புள்ளது. தற்போது என்றும் போல உலகக்கோப்பையின் இரண்டு வாரத்திற்கு முன்னர் இல்லாமல், கடந்த சில வருடங்களாக பயிற்சி செய்து வருகிறோம். இதனால் கண்டிப்பாக கோப்பை இங்கிலாந்து அணிக்குத்தான் என எனக்கு நம்பிக்கை உள்ளது

என்று கூறினார் ஜேம்ஸ் டெய்லர்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-5 என்ற கணக்கில் பறிகொடுத்து ‘ஒயிட்வாஷ்’ ஆன ஆஸ்திரேலியா தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. தொடருக்கு முன்பாக 104 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் புள்ளி எண்ணிக்கை இப்போது 100 ஆக குறைந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மோசமான தரநிலை இதுவாகும்.இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் - அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர் 4

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் 2 புள்ளிகளை இழந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை பந்தாடியதன் மூலம் 3 புள்ளிகள் சேகரித்து மொத்தம் 126 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் தொடருகிறது. இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.

அடுத்த மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. முதலிடத்தை தக்கவைக்க இந்த தொடரில் இங்கிலாந்து குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது வெற்றி பெற்றாக வேண்டும். மாறாக, தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தினால், இந்தியா மீண்டும் முதலிட அரியணையில் ஏறும்.

இந்த உலகக்கோப்பை எங்களுக்குதான் - அடித்து சொல்லும் ஜேம்ஸ் டெய்லர் 5

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை வருமாறு:-

1. இங்கிலாந்து (126 புள்ளி), 2. இந்தியா (122 புள்ளி), 3. தென்ஆப்பிரிக்கா (113 புள்ளி), 4. நியூசிலாந்து (112 புள்ளி), 5. பாகிஸ்தான் (102 புள்ளி), 6. ஆஸ்திரேலியா(100 புள்ளி), 7.வங்காளதேசம் (93 புள்ளி), 8.இலங்கை (77 புள்ளி), 9.வெஸ்ட் இண்டீஸ் (69 புள்ளி), 10. ஆப்கானிஸ்தான்(63 புள்ளி).

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *