வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!! யார் யாருக்கு வாய்ப்பு! இந்த இளம் வீரர்கள் கண்டிப்பாக இடம்பெறுவார்கள்! 1

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றதால் அணியில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்டு, 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

 

இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு அணியை தேர்வு செய்கிறது. உலக கோப்பை தொடரில், இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியதால், அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!! யார் யாருக்கு வாய்ப்பு! இந்த இளம் வீரர்கள் கண்டிப்பாக இடம்பெறுவார்கள்! 2

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்ததால் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 38 வயதான டோனி இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெற வேண்டும் என்று ஷேவாக், கவுதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் டோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறுவாரா? அல்லது கழற்றி விடப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பான யூகங்களுக்கு இப்போது டோனியே விடையளித்து விட்டார்.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!! யார் யாருக்கு வாய்ப்பு! இந்த இளம் வீரர்கள் கண்டிப்பாக இடம்பெறுவார்கள்! 3

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக கூறியுள்ள டோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்தினருடன் இணைந்து தனது நேரத்தை செலவிட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் அனுப்பி உள்ளார். ராணுவத்தில் அதிக பற்று கொண்ட டோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருப்பது நினைவு கூரத்தக்கது.

தோனி இந்த தொடரில் இடம்பெறவில்லை என்று கூறிவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் சேர்க்கப்படுகிறார். மாற்று விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார். டெஸ்ட் தொடரில், கோலி, பும்ரா இணைந்துகொள்ள இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!! யார் யாருக்கு வாய்ப்பு! இந்த இளம் வீரர்கள் கண்டிப்பாக இடம்பெறுவார்கள்! 4

ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமாகவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக கர்நாடகத் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதை மனதில் கொண்டே அணியின் தேர்வு இருக்கும். அந்த வகையில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் மற்றும் பிரித்வி ஷா உள்ளிட்டோரில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *