இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா - நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர் 1

இந்திய கிரிக்கெட் அணியின் பஸ் டிரைவர்  ஜெப் குட்வின் தனக்கு உதவி பற்றி கூறியுள்ளார்

 

கிரிக்கெட் வீரர்கள் வீரர்கள் அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல கோடி சம்பாதித்து வருகின்றனர் அதை எல்லாம் அவர்களது ரசிகர்கள் அவர்களுக்குக் கிடைத்தது இருந்தாலும் அவர்கள் தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை நற்செயல்களும் கொடுத்து வருகின்றனர்.

அது அவர்களது நல்ல மனதை காட்டுகிறது பல நேரங்களில் அவர்கள் செய்யும் செயல்கள் குறிப்பாக நற்செயல் வெளியில் வருவதில்லை. ஒரு சில நேரங்களில் மட்டுமே அந்த பலனை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா இந்திய அணியின் பஸ் டிரைவர் ஜெப் குட்வினுக்கு உதவி செய்துள்ளார் அந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா - நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர் 2
Team wanted BCCI to tweak Sri Lanka series or cancel the T20Is

இந்திய அணி இங்கிலாந்து பயணம் செய்யும் போதெல்லாம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெப் குட்வின் என்பவர் இந்திய அணியின் பஸ் டிரைவராக இருந்து வருகிறார்

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர்தான் இந்திய அணிக்கு பஸ் ட்ரைவர்.  இந்திய அணிக்கு மட்டுமல்லாது இங்கிலாந்திற்கு பயணம் செய்து விளையாடும் பல நாட்டு அணிக்கு ட்ரைவராக் இருந்துள்ளார் பல நாட்டு அணிகளுக்கு பஸ் டிரைவராக இருந்தாலும் அதில் அவருக்கு மிகவும் பிடித்த அணி இந்தியா அணிதான் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் பயணம் செய்து விளையாடிய போது இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தனக்கு உதவியது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா - நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர் 3

இதுகுறித்து அவர் கூறியதாவது

இந்திய அணி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இங்கு வந்து விளையாடும் போது எல்லாம் நான்தான் அந்த அணிக்கு தலைவராக இருக்கிறேன் ஆஸ்திரேலியா இலங்கை நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு பஸ் டிரைவராக இருந்தேன்.

ஆனால் இந்தியா  போல் ஒரு தொழில்முறை நேர்த்தியான அணியை நான் பார்க்கவில்லை. என் மனதிற்கு அவர்கள் மிகவும் நெருக்கமானவர்கள் அவர்கள் கிரிக்கெட்டில் மிகவும் சரியாக இருப்பார்கள் கிரிக்கெட் விளையாட வந்தால் அதை மட்டும்தான் செய்வார்கள். சரியான நேரத்திற்கு மைதானத்திர்குள் நுழைந்தவுடன் ஆடி முடித்து விட்டு பின்னர் மீண்டும் உடை மாற்றும் அறைக்கு சென்றாலும் அங்கு வெகுநேரம் இருக்க மாட்டார்கள் உடனடியாக வெகுவிரைவாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களது ஹோட்டல் அறைக்கு சென்று விடுவார்கள்.

இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா - நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர் 4
India’s Harbhajan Singh, in blue uniform, and Australian players are seen engaged in an interaction after Singh’s dismissal during the second one day international cricket match in Cochin, India, Tuesday, Oct.2, 2007. (AP Photo/Aman Sharma)

ஆனால் ஆஸ்திரேலியா போன்ற அணியினர் போட்டி முடிந்த பின்னர் காலை 2 மணி வரையும் கூட உடைமாற்றும் அறையில் இருந்து கொண்ட அரட்டை அடித்துக் கொண்டிருப்பர். மேலும் போட்டி முடிந்த பின்னர் அந்த இரவு அவர்கள் பார்ட்டி கொண்டாடிவிட்டு மதுபானம் அருந்த செல்வார்.ஆனால் இந்திய அணியிடம் அப்படி ஒன்றும் இல்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கு வந்தபோது எனது மனைவிக்கு கடுமையான நோய் ஏற்பட்டது இதற்காக என் மனைவியை மருத்துமனையில் அனுமதித் இருந்தேன். அப்போது என்னிடம் பணம் இல்லை அதனை கண்ட சுரேஷ் ரெய்னா தனது ஒரு டி-ஷர்ட்டை என்னிடம் கொடுத்து இது என்னுடைய டீ சர்ட் இதனை ஏலத்தில்விட்டு உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உங்களது மனைவிக்கு உதவுங்கள் என்று என்னிடம் கொடுத்தார் இந்த நிகழ்வினை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் அந்த டிரைவர்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *