ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை ஸ்டீவ் ஸ்மித் அடிக்க முயற்சிக்க, கீப்பர் பக்கம் சென்றபோது, பாய்ந்து கேட்ச் எடுத்து விக்கெட்டாக மாற்றியுள்ளார் கேஎல் ராகுல்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டேவிட் வார்னர் முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சல் மார்ஸ் ஓப்பனிங் செய்தனர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி டிராவிஸ் ஹெட்(5) விக்கெட்டை போல்டாக்கி எடுத்தார்.

அதன்பிறகு உள்ளே வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்தபோது, ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் அடிக்க முயற்சி செய்தபொது, பந்து கீப்பர் வசம் சென்றது. கீப்பிங் செய்துகொண்டிருந்த கேஎல் ராகுல் பாய்ந்து பிடித்து அபாரமான கேட்சாக மாற்றினார். அதைப்பார்த்து ஆச்சர்யத்துடன் வெளியேறினார் ஸ்மித்.


அதன்பிறகு நிறுத்தாமல் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழைகளை பொழிந்த மிட்சல் மார்ஷ் 81 ரங்களுக்கு ஜடேஜா பந்தில் அவுட்டானார். ரன்களை வாரிக்கொடுத்து வந்த இந்தியா, இந்த இடத்தில தான் மீண்டும் ஆட்டத்திற்குள்ளே வந்தது. அதன்பின் உள்ளே வந்த லபுஜானே(15) குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஜடேஜா வசம் பிடிபட்டு அவுட்டானார்.
ஜோஷ் இங்கிலிஷ் நன்றாக விளையாடிவந்தபோது முகமது சமி தரமான பந்துவீச்சால் போல்டாக்கி வெளியேற்றினார். இவர் 27 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்தார்.

ஒருகட்டத்தில் இந்திய அணி மிகவும் தடுமாறிவந்தது. பின்னர் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்துள்ளனர். 30 ஓவர்கள் முடிவில் 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.
ஹர்திக் பாண்டியா பந்தில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்த வீடியோ:
Edged and taken!@hardikpandya7 strikes and how good was that grab behind the stumps from @klrahul 💪
Steve Smith departs.
Watch his dismissal here 👇👇#INDvAUS @mastercardindia pic.twitter.com/yss3sj4N4z
— BCCI (@BCCI) March 17, 2023