பாவம் அந்த பையன்... அவருக்கும் அணியில் இடம் கொடுத்திருக்கலாம்; இளம் வீரருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !! 1

அயர்லாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவாட்டியாவிற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

பாவம் அந்த பையன்... அவருக்கும் அணியில் இடம் கொடுத்திருக்கலாம்; இளம் வீரருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !! 2

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு செல்வதால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிபாட்டிக்கும் முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பாவம் அந்த பையன்... அவருக்கும் அணியில் இடம் கொடுத்திருக்கலாம்; இளம் வீரருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !! 3

உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய ராகுல் திவாட்டியாவிற்கு இடம் கொடுக்காதது சரியான முடிவு அல்ல., அவருக்கு அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ராகுல் திவாட்டியா குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரும், அயர்லாந்து தொடரில் ராகுல் திவாட்டியாவிற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாவம் அந்த பையன்... அவருக்கும் அணியில் இடம் கொடுத்திருக்கலாம்; இளம் வீரருக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !! 4

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவாட்டியாவிற்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அயர்லாந்து தொடருக்காக 15 வீரர்களை தேர்வு செய்துள்ள இந்திய அணி, கூடுதலாக ராகுல் திவாட்டியாவையும் இணைத்து 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்திருக்கலாம். ஐபிஎல் தொடரில் அவரும் மிக சிறப்பாக விளையாடினார், பல போட்டிகளில் தனது அணிக்காக வெற்றியையும் பெற்று கொடுத்தார். அவரது பேட்டிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது, அவரை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.