இதனால தான்யா விராட் கோலி பிஸ்தா பிளேயர்... வேறு யார் பேட்டிங்கில் இருந்தாலும் டி20 உலககோப்பைல பாகிஸ்தானை அந்த நேரத்தில் தோற்கடித்திருக்க மாட்டார்கள் - சொந்த நாட்டை வீழ்த்திய வீரரை புகழ்ந்த மிஸ்பா-உல்-ஹக்! 1

விராட் கோலி இதனால்தான் உச்சத்தில் இருக்கிறார். வேறு எந்த வீரராக இருந்தாலும் பாகிஸ்தானை அப்படி ஒரு சூழலில் வீழ்த்தி இருக்க முடியாது என்ற பாராட்டிப் பேசியுள்ளார் மிஸ்பா-உல்-ஹக்.

கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை சென்று, துரதிஷ்டவசமாக இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.

இருப்பினும் நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால், விளையாடிய முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது. மிகமுக்கியமான போட்டியில் விராட் கோலி தனி ஆளாக நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

Virat kohli

அப்போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவ்ப் மிகச்சிறந்த பார்மில் பந்துவீசி வந்தார். முக்கியமான 19வது ஓவரை அவர் வீசினார். அதற்கு முந்தைய மூன்று ஓவர்களில் 6 ரன்ரேட்-க்கும் குறைவாக விட்டுக் கொடுத்திருந்தார். ஆட்டத்தின் கடைசி 8 பந்துகளுக்கு 28 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்பட்டது.

அப்போது ஹாரிஸ் ராவ்ப் வீசிய ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி, இரண்டையும் சிக்ஸர்களாக அடித்து ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது அதிலும் ஒரு சிக்ஸர் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். 82 ரன்களை விராட் கோலி அடித்திருந்தார்.

இதனால தான்யா விராட் கோலி பிஸ்தா பிளேயர்... வேறு யார் பேட்டிங்கில் இருந்தாலும் டி20 உலககோப்பைல பாகிஸ்தானை அந்த நேரத்தில் தோற்கடித்திருக்க மாட்டார்கள் - சொந்த நாட்டை வீழ்த்திய வீரரை புகழ்ந்த மிஸ்பா-உல்-ஹக்! 2

விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸாக அது கருதப்பட்டது. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் விராட் கோலியை பாராட்டியதை பார்க்க முடிந்தது. அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர்  மிஸ்பா-உல்-ஹக் விராட் கோலியின் மனநிலை மற்றும் உறுதியை பாராட்டி பேசியுள்ளார்.

“அப்படிப்பட்ட கடினமான சூழலில், குறிப்பாக உலகத் தரமிக்க பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் நேரத்தில், சாதாரண பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய திணறுவர். அந்த நேரத்தில் தான் உறுதியான மனநிலை, அதீத தன்னம்பிக்கை மற்றும் வெற்றிபெற வேண்டும் என்ற தீராப் பசி ஆகியவற்றை கொண்ட தலைசிறந்த வீரரால் மட்டுமே அத்தகைய சூழலை கையாண்டு அணிக்கு வெற்றியை பெற்றுத் தர முடியும். அப்படிப்பட்ட வீரராக விராத் கோலி இருந்தார். இப்போதும் இருக்கிறார். டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடியது நம்பவே முடியாத ஒரு ஆட்டமாக எனக்கு தோன்றியது. இதனால் தான் அவர் பல வருடங்களாக தலைசிறந்த வீரராக இருக்கிறார்.” என்று மிஸ்பா-உல்-ஹக் புகழ்ந்து பேசினார்.

இதனால தான்யா விராட் கோலி பிஸ்தா பிளேயர்... வேறு யார் பேட்டிங்கில் இருந்தாலும் டி20 உலககோப்பைல பாகிஸ்தானை அந்த நேரத்தில் தோற்கடித்திருக்க மாட்டார்கள் - சொந்த நாட்டை வீழ்த்திய வீரரை புகழ்ந்த மிஸ்பா-உல்-ஹக்! 3

தனது சொந்த நாட்டிற்கு எதிராகவே மிகச்சிறப்பாக விளையாடிய, வெற்றி பெற்றுத்தந்த எதிரணி வீரராக இருந்தாலும், சிறந்த கிரிக்கெட்டை பாராட்டிய இவரது பண்பு இந்திய ரசிகர்களுக்கு மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *