ஜடேஜா ஒன்னும் அடிச்சு ஜெயிக்கல... அந்த கடைசி பந்தில் நான் செய்த பெரிய தப்பு தான் சென்னை வெற்றிக்கு காரணம் ; மவுனம் கலைத்த மோஹித் சர்மா !! 1
ஜடேஜா ஒன்னும் அடிச்சு ஜெயிக்கல… அந்த கடைசி பந்தில் நான் செய்த பெரிய தப்பு தான் சென்னை வெற்றிக்கு காரணம் ; மவுனம் கலைத்த மோஹித் சர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இறுதி போட்டியின் கடைசி ஓவரை வீசியது குறித்தான அனுபவத்தை மோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்தார்.

ஜடேஜா ஒன்னும் அடிச்சு ஜெயிக்கல... அந்த கடைசி பந்தில் நான் செய்த பெரிய தப்பு தான் சென்னை வெற்றிக்கு காரணம் ; மவுனம் கலைத்த மோஹித் சர்மா !! 2

இதன்பின் மழை குறுக்கிட்டு போட்டியை 2 மணி நேரம் தாமதப்படுத்தியதால், போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, சென்னை அணிக்கான வெற்றி இலக்கும் 172ஆக குறைக்கப்பட்டது.

90 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே (46), கெய்க்வாட் (26), ரஹானே (27), ராயூடு (19) என ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தனர். மறுமுனையில் குஜராத் அணியும் பந்துவீச்சில் முடிந்தவரை மல்லுக்கட்டியதால் கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஜடேஜா ஒன்னும் அடிச்சு ஜெயிக்கல... அந்த கடைசி பந்தில் நான் செய்த பெரிய தப்பு தான் சென்னை வெற்றிக்கு காரணம் ; மவுனம் கலைத்த மோஹித் சர்மா !! 3

மோஹித் சர்மாவின் பந்துவீச்சில் 2 பந்துகளில் 10 ரன்கள் சாத்தியமே இல்லை என கருதப்பட்ட நிலையில், 5வது பந்தில் சிக்ஸரும், கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்த ஜடேஜா, சென்னை அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசியது குறித்தான தனது அனுபவத்தை மோஹித் சர்மா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜடேஜா ஒன்னும் அடிச்சு ஜெயிக்கல... அந்த கடைசி பந்தில் நான் செய்த பெரிய தப்பு தான் சென்னை வெற்றிக்கு காரணம் ; மவுனம் கலைத்த மோஹித் சர்மா !! 4

 

இது குறித்து மோஹித் சர்மா பேசுகையில், “நான் இது போன்ற பல இக்கட்டான நிலைகளை சந்தித்துள்ளேன். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க அதிகமான பயிற்சிகளும் மேற்கொண்டுள்ளேன். கடைசி ஓவர் அதிக அழுத்தம் நிறைந்ததாக இருந்தாலும், என்னால் முடிந்தவரையில் அனைத்து பந்துகளையும் யார்கராக வீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நான் என் மீது அதிக நம்பிக்கையும் வைத்திருந்தேன். வெளியில் இருப்பார்கள் நான் இப்படி செய்திருக்க வேண்டும், இதை செய்திருக்க கூடாது என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் நான் என்னால் முடிந்தவரையும் கடுமையாக முயற்சித்தேன் என்பதே உண்மை. 5வது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்த போதிலும் நான் அதிக நம்பிக்கையுடன் தான் இருந்தேன். கடைசி பந்தையும் யார்கராக வீச வேண்டும் என்றே நினைத்தேன், நான் வீசிய கடைசி பந்து எந்த இடத்தில் விழுக கூடாதோ, அந்த இடத்திற்கு சரியாக சென்றுவிட்டது, ஜடேஜா இதனை சரியாக பயன்படுத்தி கொண்டார். நான் என்னால் முடிந்த வரை முயற்சித்தேன்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *