ஐபிஎல் இறுதி போட்டியை விட டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வேற லெவல்ல இருக்கனும்; ரிக்கி பாண்டிங் விருப்பம் !! 1
ஐபிஎல் இறுதி போட்டியை விட டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வேற லெவல்ல இருக்கனும்; ரிக்கி பாண்டிங் விருப்பம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன.

ஐபிஎல் இறுதி போட்டியை விட டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வேற லெவல்ல இருக்கனும்; ரிக்கி பாண்டிங் விருப்பம் !! 2

டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி ஜூன் 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டி.20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளுக்கு, டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையையும் சளைத்தது இல்லை என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் இறுதி போட்டியை விட டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வேற லெவல்ல இருக்கனும்; ரிக்கி பாண்டிங் விருப்பம் !! 3

இந்தநிலையில், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங், இறுதி போட்டி பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “கிரிக்கெட் உலகம் மிக சிறப்பான டெஸ்ட் போட்டியை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது. எனவே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி டிராவாக முடிந்துவிட கூடாது என்றே நான் விரும்புகிறேன். இரு அணியின் கேப்டன்களும் வெற்றிக்காக மட்டுமே கடினமாக போராடுவார்கள் என நம்புகிறேன். தோல்வியே அடைந்தாலும் சரி இரு அணி கேப்டன்களும் போட்டி டிராவில் முடிப்பதற்காக முயற்சிக்க கூடாது என்றே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *