Cricket, India, New Zealand, Virat Kohli, Kuldeep Yadav, Ravi Ashwin
Cricket, India, New Zealand, Virat Kohli, Kuldeep Yadav, Ravi Ashwin

ஒரு நாள் கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு கதவுகள் அடைக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்  கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சமீப காலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. Cricket, India, Sri Lanka, Murali Vijay, Ishant Sharma

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத்  கூறும்போது, ‘2019-ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறோம். அப்படித்தான், ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஸ்ரேயாஸ் ஐயரையும் அப்படித்தான் தேர்வு செய்தோம். ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்காதது பற்றி கேட்கிறார்கள். Cricket, India, New Zealand, MSK Prasad, Virat Kohliதிறமையான வீரர்களை கண்டறியும் பொருட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறோம். ஒரு நாள் போட்டியில் அவர்களுக்கான கதவு அடைக்கப்படவில்லை. அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் மிடில் ஆர்டரில் அணியை இன்னும் வலுவாக்க வேண்டி இருக்கிறது. இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று விளையாட இருக்கிறது. கோலி தலைமையிலான அணி, அங்கும் சிறப்பாக விளையாடும்’ என்றார். அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு: தேர்வுக்குழு தலைவர் 1

டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தென்னாபிரிக்கவிற்கு பயணம் செய்யவுள்ள இந்தியா அணி டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில்  ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளது. பின்னர் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக 6 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் மற்றூம் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பிருக்கு: தேர்வுக்குழு தலைவர் 2

இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் அட்டவணை

பயிற்சி ஆட்டம் – டிச.30&31, பார்ல் மைதானம், மதியம் 1.30

டெஸ்ட் தொடர்

  1. முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி.5, கேப்டவுன், மதியம் 1.30 மணிக்கு
  2. இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.13, செஞ்சூரியன்,மதியம் 2.00
  3. மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.24, ஜோகனஸ்பெர்க், மதியம் 1.30

ஒருநாள் தொடர்

  1. முதல் ஒருநாள் போட்டி – பிப்.01, டர்பன், மாலை 5.00 மணிக்கு
  2. இரண்டாவது ஒருநாள் போட்டி – பிப்.04,செஞ்சூரியன் மதியம் 1.30
  3. மூன்றாவது ஒருநாள் போட்டி – பிப்.07, கேப் டவுன், மாலை 5.00 மணிக்கு
  4. நாளாவது ஒருநாள் போட்டி – பிப்.10, ஜோகனஸ்பெர்க், மாலை 5.00
  5. ஐந்தாவது ஒருநாள் போட்டி – பிப்.13, போர்ட் எலிசபெத், மாலை 5.00
  6. ஆறாவது ஒருநாள் போட்டி – பிப்.16, செஞ்சூரியன், ம்ச்ஸ்ல்சி 5.00

டி20 தொடர்

  1. முதல் டி20 போட்டி – பிப்.18, ஜோகனஸ்பெர்க், மாலை 6.00
  2. இரண்டாவது டி20 போட்டி – பிப்.21, செஞஜூரியன், இரவு 9.30
  3. மூன்றாவது டி20 போட்டி – பிப்.24, கேப் டவுன், கேப் டவுன், இரவு 9.30

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *