விராட் கோலியின் 3 வருட மகுடத்தை தூக்க பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் எது தெரியுமா? 1

2020 விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் பென் ஸ்டோக்ஸை உலகின் சிறந்த வீரர் என்று அறிவித்துள்ளது. 2005-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இந்த விருதை அலங்கரித்த பிறகு இன்னொரு இங்கிலாந்து வீரராக பென் ஸ்டோக்ஸ் தற்போது இந்த விருதை அலங்கரித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதே போல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது இன்னிங்சில் பிரையன் லாராவை நினைவூட்டும் விதமாக 135 நாட் அவுட் என்று மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.விராட் கோலியின் 3 வருட மகுடத்தை தூக்க பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் எது தெரியுமா? 2

விஸ்டன் எடிட்டர் லாரன்ஸ் பூத் கூறும்போது, “வாழ்நாள் சாதனை இன்னிங்ஸை சில வாரங்கள் இடைவெளியில் இருமுறை நிகழ்த்தி விட்டார் பென் ஸ்டோக்ஸ், முதலில் உலகக்கோப்பையில் மிகப்பெரிய திறமையுடனும் கொஞ்சம் அதிர்ஷ்டத்துடனும் இலக்கை விரட்டி வெற்றி பெறச் செய்தார், சூப்பர் ஓவரில் 15 ரன்களை எடுக்க உதவினார்.

பிறகு ஆஷஸ் தொடரில் ஹெடிங்லீயில் 3வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார், 135 நாட் அவுட், என்று ஒரு விக்கெட் வெற்றி பெறச் செய்தார், வெள்ளைப் பந்தாக இருந்தாலும் சிகப்புப் பந்தாக இருந்தாலும் இயற்கையின் ஒரு சக்தி பென் ஸ்டோக்ஸ்” என்று கூறி புகழாரம் சூட்டினார்.

முன்னதாக ஸ்டோக்ஸ் ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதையும் தட்டிச் சென்றார். உலகக்கோப்பை சூப்பர் ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் விஸ்டனின் 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

விராட் கோலியின் 3 வருட மகுடத்தை தூக்க பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம் எது தெரியுமா? 3
LONDON, ENGLAND – JULY 14: Ben Stokes of England plays a shot for four during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord’s Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

ஆஸி.யின் பாட் கமின்ஸ், மார்னஸ் லபுஷேன், எல்லிஸ் பெரி ஆகியோர் ஆர்ச்சருடன் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எசெக்ஸ் அணி ஆஃப் ஸ்பின்னர் சைமன் ஹார்மரும் பட்டியலில் உள்ளார்.

எலிஸ் பெரி உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவைடமிருந்து தட்டிச் சென்றார்,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *