சத்தியமா எதுவுமே உண்மை இல்ல; குல்தீப் யாதவ் வேதனை

தோனி குறித்து தான் பேசியதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், போட்டியின் போது வழக்கமாக தோனி கொடுக்கும் ஆலோசனைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த குல்தீப், ”தோனி தேவையில்லாமல் மைதானத்திற்குள் பேசமாட்டார். ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடையே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்ததாக செய்தி பரவியது.

MANCHESTER, ENGLAND – JULY 02: Siddarth Kaul of India bowls during a net session at Emirates Old Trafford on July 2, 2018 in Manchester, England. (Photo by Gareth Copley/Getty Images)

தோனி எடுக்கும் முடிவுகள் பல ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்திருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் குல்தீப் யாதவ் இவ்வாறு கூறினாரா என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சர்ச்சை குறித்து குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  எந்தக் காரணமும் இல்லாமல் வதந்தியை கிளப்பி ஊடங்கள் புதிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கின்றன. அதனை சிலர் வேகமாக பரப்பி வருகின்றனர். நான் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு. நான் யார் குறித்தும் எதுவும் பேசவில்லை. தோனி மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து கருத்து கூறியதாக குல்தீப் யாதவ் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அவர்  தற்போது அளித்துள்ள விளக்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

 



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் !!

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்...

    ஒரே ஒவரில் 5 பவுண்டரி! பாக். வீரரை அடித்து துவம்சம் செய்த ஆப்கன் இளம் வீரர்!

    Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)
    ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை...

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா !!

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை...

    பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் காயம்: ரசிகர்கள் கவலை!

    உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம்...

    ‘எப்பிடி இருந்த நான்.. இப்பிடி ஆய்ட்டேன்’ ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ‘அன்றும்,இன்றும்’ புகைப்படம்!

    தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம்...