நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !! 1
நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி என்ற ரகசியத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொள்ளும் முறைப்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜாவை தங்களது அணியில் தக்க வைத்து கொண்டது.

நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !! 3

இந்நிலையில் தற்போது சென்னைக்கு வந்துள்ள தல தோனி, கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெறும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்சியாக கலந்து கொண்டு வருகிறார்.

இதில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோனி, தலை சிறந்த விக்கெட் கீப்பராக தான் உருவெடுத்தது எப்படி என்ற ரகசியத்தை நிருபர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !! 4

இது குறித்து பேசிய தோனி “விக்கெட் கீப்பர்களை பொறுத்துவரையில் அவர்களுக்கு தனியாக பயிற்சி எதுவும் தேவையில்லை. களத்தில் எதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தாலே போதுமானது. களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும் பல விக்கெட் கீப்பர்களை நான் பார்த்து பிரமித்து போய் உள்ளேன்.

ஐ.பி.எல் தொடரில் நான் சென்னை அணிக்காக விளையாடிய 8 ஆண்டுகளில் ஒரு முறை கூட நான் விக்கெட் கீப்பிங்கிறான பயிற்சியை மேற்கொண்டது இல்லை. சென்னை அணியின் பயிற்சியாளரான பிளமிங்கும் தன்னை அவ்வாறு விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ள சொன்னது இல்லை. என்னை பொறுத்த வரையில் ஒரு விக்கெட் கீப்பர் 100 பந்துகளை கூட விடலாம். ஆனால் கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் முறையை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.