இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் வேற லெவலில் இருந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது.

என்னங்க இந்த பையன் இப்படி விளையாடுறான்…? இந்திய வீரரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் வீரர் !! 2

இதனையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன், மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

நீண்டநேரம் தன்னந்தனியாக போராடிய சூர்யகுமார் யாதவும் 53 ரன்களில் விக்கெட்டை இழந்துவிட்டதால், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என கருதப்பட்ட நிலையில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் சாஹர் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரளவைக்கும் வகையிலான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

என்னங்க இந்த பையன் இப்படி விளையாடுறான்…? இந்திய வீரரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் வீரர் !! 3

இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட தீபக் சாஹர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 49வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தநிலையில், இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குறித்து தனது யுடியூப் சேனல் மூலம் பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல், சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.

என்னங்க இந்த பையன் இப்படி விளையாடுறான்…? இந்திய வீரரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் வீரர் !! 4

சூர்யகுமார் யாதவ் குறித்து கம்ரன் அக்மல் பேசுகையில், “இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் ஆச்சரியத்தை கொடுத்தது. அவரது ஆட்டத்தில் முதிர்ச்சிதன்மை அதிகம் இருந்தது. சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் ஏதோ 70 – 80 போட்டிகளில் விளையாடியுள்ள வீரரை போன்று இருந்தது. உள்ளூர் தொடர்களில் கிடைத்த அனுபவமே சூர்யகுமார் யாதவிற்கு தற்போது கை கொடுத்து வருகிறது. இக்கட்டான நேரத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்தது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.

இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *