இந்த வருசம் இவர் மட்டும் எங்களுக்கு கிடைக்கலேனா நாங்க அப்படியே தான் இருந்திருப்போம்; சாஹல் அதிரடி கருத்து !! 1

கிளன் மேக்ஸ்வெல் பெங்களூர் அணிக்கு வந்த பிறகு பெங்களூர் அணியில் நிலவி வந்த பேட்டிங் பிரச்சனை சரியாகிவிட்டதாக பெங்களூர் அணியின் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுதப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 29 போட்டிகளே நடத்தப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக ஐபிஎல் தொடர் நிறுதப்பட்டது. எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாய் அல்லது இங்கிலாந்தில் வைத்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருசம் இவர் மட்டும் எங்களுக்கு கிடைக்கலேனா நாங்க அப்படியே தான் இருந்திருப்போம்; சாஹல் அதிரடி கருத்து !! 2

இந்தநிலையில், ஐபிஎல் தொட ர் குறித்து பேசியுள்ள பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல், இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது துவங்கினாலும் பெங்களூர் அணி கவலை இல்லாமல் அசால்டாக விளையாடும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருசம் இவர் மட்டும் எங்களுக்கு கிடைக்கலேனா நாங்க அப்படியே தான் இருந்திருப்போம்; சாஹல் அதிரடி கருத்து !! 3

இது குறித்து சாஹல் பேசுகையில், “இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் நாங்கள் முதல் நான்கு இடங்களுக்குள் உள்ளோம். இதனால் இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது துவங்கினாலும் எங்களால் எந்த கவலையும் இல்லாமல் அசால்டாக விளையாட முடியும். கடந்த தொடர்களை போன்று கடைசி இடத்தில் இருந்து முன்னேறி வர கஷ்டப்பட தேவை இல்லை. கடந்த தொடர்களில் கடைசி 7 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றி பெற்றாக கட்டாயத்தில் எல்லாம் இருந்திருக்கிறோம், ஆனால் இந்த முறை எந்த பதட்டமும், நெருக்கடியும் இல்லாமல் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியை எதிர்கொள்வோம். கிளன் மேக்ஸ்வெல்லின் வருகையின் கடந்த தொடர்களில் பெங்களூர் அணியில் நிலவி வந்த பேட்டிங் பிரச்சனை சரியாகிவிட்டது. இதனால் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் மீதான நெருக்கடி குறைந்துவிட்டது, இதுவும் எங்களுக்கு ஒரு நல்ல விசயமே. தேவ்தட் படிக்கல்லும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வருசம் இவர் மட்டும் எங்களுக்கு கிடைக்கலேனா நாங்க அப்படியே தான் இருந்திருப்போம்; சாஹல் அதிரடி கருத்து !! 4

நானும் விலகியிருப்பேன்;

ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகலாம் என நினைத்திருந்தேன். எனது பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் எனக்கு கிடைத்த பின்பு என்னால் விளையாட்டில் கவனம் செலுத்தவே முடியவில்லை. வீட்டில் பெற்றோர்கள் தனியாக கஷடப்படும் போதும் நாம் வேறு விசயத்தில் கவனம் செலுத்துவது மிக கடினம். எனது பெற்றோர்களுக்கு மே 3ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அடுத்த ஓரிரு தினங்களில் ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது, இல்லையெனில் நானாகவே விலகியிருப்பேன். எனது தந்தைக்கு சுவாசப் பிரச்சனையும் ஏற்பட்டது, அவரது ஆக்‌ஷிஜன் அளவும் 85 வரை குறைந்துவிட்டது, அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம், நேற்று அவர் வீடு திரும்பிவிட்டாலும் கொரோனா தொற்று இன்னும் சரியாகவில்லை. அவரது ஆக்‌ஷிஜன் அளவு தற்போது சீராக இருப்பது தான் எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. அடுத்த 7 முதல் 10 தினங்களுக்குள் எனது தந்தை முழு ஆரோக்கியம் பெற்றுவிடுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *