எந்த தப்பும் கிடையாது... திரும்பவும் இதை தான் செய்வேன்; தைரியமாக உண்மையை பேசிய மிட்செல் மார்ஸ் !! 1
எந்த தப்பும் கிடையாது… திரும்பவும் இதை தான் செய்வேன்; தைரியமாக உண்மையை பேசிய மிட்செல் மார்ஸ்

ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியன் கோப்பை மீது கால் வைத்து போட்டோ எடுத்ததில் எந்த தவறுமே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஸ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில், இரண்டு தோல்விகளுடன் தொடரை துவங்கிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் மிரட்டல் வெற்றி பெற்று, இறுதி போட்டியிலும் இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

எந்த தொடரை கைப்பற்றினாலும், அதன் கோப்பைகளை வைத்து வித்தியாசமாக கொண்டாடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த முறையும் அதையே செய்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஸ், சாம்பியன் கோப்பையின் மீது தனது காலை வைத்து கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மிட்செல் மார்ஸ் செய்தது தவறு என ஒரு சாராரும், மிட்செல் மார்ஸ் செய்ததில் எந்த தவறும் இல்லை, விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும், எதையும் புனிதப்படுத்த தேவை இல்லை என ஒரு சாராரும் பேசி வந்தனர். முகமது ஷமி உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மிட்செல் மார்ஸிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். வினோதமான செயல்களுக்கு பெயர் போன உத்திரபிரதேசத்தில் ஒருவர் மிட்செல் மார்ஸ் மீது காவல்நிலையில் புகாரும் கொடுத்திருந்தார்.

எந்த தப்பும் கிடையாது... திரும்பவும் இதை தான் செய்வேன்; தைரியமாக உண்மையை பேசிய மிட்செல் மார்ஸ் !! 2

இந்தநிலையில், கோப்பை மீது கால் வைத்து போட்டோ எடுத்ததில் எந்த தவறுமே இல்லை, ஆஸ்திரேலிய அணி மீண்டும் சாம்பியன் வென்றால் அப்போதும் தான் இதையே செய்வேன் என மிட்செல் மார்ஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிட்செல் மார்ஸ் பேசுகையில், “கோப்பையின் மீது கால் வைத்து நான் எடுத்த புகைப்படத்தில் என்ன்ன தவறு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அதில் மரியாதைக்குறைவான செயல் எதுவுமே இல்லை. நான் சமூக வலைதளங்களை பெரிதாக பயன்படுத்துபவன் இல்லை என்பதால் நான் மீதான விமர்சனங்களை பெரிதாக பார்க்கவில்லை. ஆனால் பலரும் இந்த விசயம் பற்றி என்னிடம் பேசினார்கள். நான் செய்ததில் எந்த தவறுமே இல்லை என்பதே எனது கருத்து. அதில் நான் மிக தெளிவாக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *