இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்! 1
BIRMINGHAM, ENGLAND - AUGUST 01: Joe Root of England looks on prior to Day One of the Specsavers 1st Test match between England and India at Edgbaston on August 1, 2018 in Birmingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் மட்டும்தான் காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இவர்கள் மட்டுமே காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் புகழாரம் சூட்டியுள்ளார்.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களம் இறங்கியது.

இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்! 2

பாக்., அணிக்கு துவக்க வீரர் மசூத் அபாரமாக ஆடி 156 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக, முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கு யாசிர் ஷா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

107 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்! 3

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக் கனவை தகர்த்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதனால் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி முதல் போட்டியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இவர்கள் இருவர்தான் முக்கிய காரணம் என போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

இங்கிலாந்து அணி வெல்வதற்கு இவர்கள் இருவர் மட்டுமே காரணம்; ஜோ ரூட் அதிரடி பதில்! 4

அவர் கூறுகையில், “இது மிகச்சிறப்பான சேசிங் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினார்கள். இங்கிலாந்திற்கு பட்லர் மற்றும் வோக்ஸ் இருவரும் ஆடிய விதமே வெற்றியைப் பெற்றுத் தந்தது. பட்லர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வோக்ஸ் அசத்தினார். ஒரு தொடரின் முதல் போட்டியில் தோற்று இருந்தால் ஒட்டுமொத்த தொடர் மோசமானதாக அமைந்திருக்கும். ஆனால் தவறுகளை விரைவில் சரி செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை ஆடிய விதமே அணியை வெற்றி வரை எடுத்துச் சென்றுள்ளது.” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *