ராஜஸ்தான் vs பஞ்சாப்: "விமர்சனத்திற்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்" ஆட்டநாயகன் கிறிஸ் கெயில்!!! 1

14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. ஆட்டநாயகனாக கெயில் தேர்வு செய்யப்பட்டார்.

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்து, களமிறங்கினார்.

பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் களம் கண்டனர். சென்ற ஆண்டை போலவே அதிரடியான ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்த்த நிலையில், ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.

ராஜஸ்தான் vs பஞ்சாப்: "விமர்சனத்திற்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்" ஆட்டநாயகன் கிறிஸ் கெயில்!!! 2

வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்து சதம் வாய்ப்பை நழுவவிட்டார். 79 ரன்களில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், 4000 ரன்களை கடந்த ஒன்பதாவது வீரர் ஆகவும், 2 வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதற்கு முன்பு வார்னர் 4000 கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மயங்க் அகர்வால் 24 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதி வரை, சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 1 சிக்ஸரும் 6 பவுண்டறிகளும் அடங்கும்

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெடுகள் இழந்து, 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கி ஆடி வருகிறது ராஜஸ்தான் அணி.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் பட்லர் இருவரும் அதிரடியில் இறங்கினர். ரஹானே 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் வெளியேறினார். அதன் பின்னும் சளைக்காமல் அதிரடியை தொடர்ந்தார் பட்லர். சாம்சன் சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் vs பஞ்சாப்: "விமர்சனத்திற்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்" ஆட்டநாயகன் கிறிஸ் கெயில்!!! 3

இந்நிலையில், அஸ்வின் சூசகமாக செயல்பட்டு பட்லரை வெளியேற்றினார். அதாவது பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்னரே வெளியே வந்துள்ளார் பட்லர். இதை பயன்படுத்தி ரன் அவுட் செய்தார்.

அங்கிருந்து ஆட்டம், பஞ்சாப் வசம் சென்றது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சாம்சன் தவிர வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பஞ்சாப் அணி. இறுதியில் 14 ரன்களில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கெயில் தேர்வு செய்யப்பட்டார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,

இது ஒரு பெரிய மைதானமாகும். முதல் ஆட்டத்தில் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். இங்கிலாந்து தொடரில் கிடைத்த நல்ல அனுபவத்துடன் தொடர்ந்தேன். இந்த வெற்றி ஐபிஎல் தொடரில் ஒரு நேர்மறை தொடக்கம். சில நேரங்களில் சிலர் நம்மை விமர்சித்து எழுதுவார்கள். ஆனால் அது என் ஆட்டத்திற்கு உதவுகிறது. இறுதியில் அவர்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், எங்கள் பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு வேலை செய்தது வெற்றிக்கு உதவியது. சர்பராஸ் இன்று சில ரன்கள் எடுத்தார், அது மிகவும் நன்றாக இருந்தது. எங்கள் இளைஞர்களுக்கு அணியில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறாக ஆட்டநாயகன் கெயில் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *