இந்திய அணியின் படுதோல்விக்கு இவர்கள்தான் காரணம் புலம்பித்தள்ளிய கேப்டன் கோலி! 1

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியதற்கு இவர்கள்தான் காரணம் என புலம்பி இருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்து இமாலய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 114 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்களும் விளாசினர்.

இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சற்று சறுக்கலாகவே அமைந்தது. மயங்க் அகர்வால் 22 ரன்களும், கேப்டன் விராட் கோலி 21 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாற்றம் கண்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஷிக்கர் தவான் 74 ரன்களும், ஹர்திக் பாண்டியா 90 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்திருந்த விராத் கோலி கூறுகையில், “நாங்கள் எங்களைத் தயார்படுத்திக் கொள்ள நிறைய கால அவகாசம் இருந்தது. அதனால் இந்த தோல்விக்கு எதையும் குற்றம்சாட்ட இயலாது. இருப்பினும் நீண்ட காலமாக 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்ததால் திடீரென 50 ஓவர் போட்டிக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை என்றே கூறவேண்டும். 25 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் ஆடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சற்று திணறினார்கள்.

கூடுதல் பந்துவீச்சு ஆப்ஷன் ஆக இருந்த ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியில் இல்லை. ஆகையால் அவர் பந்து வீச முடியவில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஸ்டாயினிஸ் மற்றும் மேக்ஸ்வெல் என இரு பெரிய ஆல்ரவுண்டர்கள் போல இந்திய அணியில் இருந்திருந்தால் பண்டியாவை வெளியில் அமர்த்திவிட்டு அவர்களில் ஒருவரை எடுத்து வந்திருப்பேன்.

நிச்சயம் பில்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் வேண்டும். மிகப்பெரிய எதிரணி ஆன ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இப்படி சோதப்புதல் கூடாது. நாளின் இறுதியில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய விதம் அபாரமாக இருந்தது. அதனால் எங்களை வீழ்த்தி விட்டார்கள். அடுத்த போட்டிகளில் சந்திப்போம்.” என பேட்டி அளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *