நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்  1
நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் எடுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தை சேர்ந்த நாரயணன் ஜெகதீஷன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்  2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்   நடைபெற்றது.

நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்  3

இதில் கோயம்புத்துரை சேர்ந்த நாரயணன் ஜெகதீஷன் என்னும் இளம் வீரரை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்  4

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஜெகதீஷன், தோனியுடன் ஒரே அணியில் விளையாட உள்ளதை நினைத்தால் என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகதீஷன் கூறியதாவது “ஐ.பி.எல் ஏலத்தை நான் டி.வி யில் பார்த்து கொண்டு தான் இருந்தான். என்னை எதாவது ஒரு அணி நிச்சயம் ஏலத்தில் எடுக்கும் என்பது எனக்கு தெரியும், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை எடுத்து கொள்ளும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. தோனியுடன் ஒரே அணியில் அவருடன் சேர்ந்து உட்காருவதை நினைத்தால் கூட எனக்கு பூரிப்பாக உள்ளது. எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நான் நிச்சயம் தவற விட்டு விட மாட்டேன். தோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நான் உண்மையாவே தோனி கூட விளையாட போறனா..? பூரிப்பில் தமிழக வீரர்  5

22 வயதான ஜெகதீஷன், ஐ.பி.எல் தொடரை போல் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்ததன் மூலமே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *