இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.... இந்த பையனோட உண்மையான ஆட்டத்த இனி தான் பாப்பீங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமான திலக் வர்மாவை, மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.... இந்த பையனோட உண்மையான ஆட்டத்த இனி தான் பாப்பீங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனியை (36*) தவிர மற்ற வீரர்கள் அனைவரும், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 97 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பின் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும், 33 ரன்கள் எடுத்த போது 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், திலக் வர்மா (36) மற்றும் சோகீன் (18) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.... இந்த பையனோட உண்மையான ஆட்டத்த இனி தான் பாப்பீங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா !! 3

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து இரண்டாவது அணியாக வெளியேறியது.

இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, மும்பை அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இளம் வீரர் திலக் வர்மாவை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.

இது எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.... இந்த பையனோட உண்மையான ஆட்டத்த இனி தான் பாப்பீங்க; இளம் வீரரை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா !! 4

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “திலக் வர்மா திறமையான வீரர். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் வருடம் தான் என்றாலும், அவரது ஆட்டத்தில் ஒரு தனித்துவமும், பொறுமையும் தெரிகிறது. திலக் வர்மா நிச்சயம் இந்திய அணியிலும் மிக விரைவில் இடம்பிடிப்பார் என நம்புகிறேன். தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்காக திலக் வர்மா மிகுந்த வெறியுடன் காத்திருக்கும் ஒரு நபர்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.