நடுவர்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான் ! இப்ப தான் புரியுது ! - டிம் பெய்ன் வருத்தம் 1

நடுவர்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான் ! இப்ப தான் புரியுது ! – டிம் பெய்ன் வருத்தம் 

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.

நடுவர்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான் ! இப்ப தான் புரியுது ! - டிம் பெய்ன் வருத்தம் 2

இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நடுவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸின் போது புஜாராவின் விக்கெட் சந்தேகமாக இருந்ததால் டிம் பெய்ன் டிஆர்எஸ் கேட்டார். இதற்கு 3வது நடுவர் இந்திய அணிக்கு சாதகமாக கூறினார். அப்போது  டிம் பெய்ன் நடுவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேட்ச் ரெப்ரி டேவிட் பூன் போட்டியிலிருந்து தடை செய்வதற்கான ஒரு புள்ளியை கொடுத்துள்ளார். இந்நிலையில் நடுவரின்  தீர்ப்பிற்கு எதிர்த்து பேசியதால் மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டேன் என்று தற்போது வருத்தப்படுகிறார் டிம் பெய்ன்.

நடுவர்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான் ! இப்ப தான் புரியுது ! - டிம் பெய்ன் வருத்தம் 3

இது குறித்து பேசிய டிம் பெய்ன் “ நான் அவர்களிடம் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது.  இதனால் நான் ஒரு மோசமான உதாரணமாக  மாறிவிட்டேன். நான் நடுவர்களிடம் பேசியது ஸ்டெம்பிள் இருக்கும் மைக்கில் ரெக்கார்டாகி இருக்கும். இந்த போட்டியை ஏராளமான குழந்தைகளும் பார்த்திருப்பார்கள். நான் செய்தது மிகப் பெரிய தப்பு. நான் சிறந்த முன்னுதாரணமாக இருக்க முயற்சி செய்வேன்”  என்று கூறியுள்ளார்.

நடுவர்கிட்ட அப்படி பேசுனது தப்பு தான் ! இப்ப தான் புரியுது ! - டிம் பெய்ன் வருத்தம் 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *