இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 1

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 2

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நாளை துவங்க உள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு !! 3

பேட்ஸ்மேன்கள் வரிசையில் உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச், ஷான் மார்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், டிம் பெய்ன்ன், டர்விஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன் மற்றும் ஹெசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

மார்கஸ் ஹரீஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஜோஸ் ஹசீல்வுட்.

இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், கே.எல் ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *