புதிய மைல்கல்லை எட்டினார் ஹிட்மேன் ரோஹித் சர்மா

விண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சர்வதேச டி.20 அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி.20 அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

ரோஹித் சம்ரா – 4 சதங்கள்;

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வரும் ரோஹித் சர்மா இதுவரை 4 சதஞ்கள் அடித்திருப்பதன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கார்லின் முன்ரோ – 3 சதங்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கார்லின் முன்ரோ இதுவரை மூன்று சதங்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கே.எல் ராகுல் – 2 சதங்கள்

குட்டி கோஹ்லி என்று அழைக்கப்படும் அளவிற்கு சமீப காலமாக தொடர்ந்து சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் இதுவரை இரண்டு சதங்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கிளன் மேக்ஸ்வெல்;

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இவரும் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல்;

சிக்ஸர் கிங் என்று அழைக்கப்படும் டி.20 ராட்சஷன் கிறிஸ் கெய்லும் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

மெக்கெல்லம்;

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான பிராண்டம் மெக்கெல்லம் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

ஈவன் லீவிஸ் – 2 சதங்கள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இவரும் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

ஆரோன் பின்ச் – 2 சதங்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஆஸ்திரேலிய அணியின் தற்போதையை கேப்டனுமான  இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

மார்டின் கப்தில் – 2 சதங்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மார்டின் கப்தில் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

  ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

  2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

  ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

  ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...

  என்னை தக்க வைத்ததன் மூலம் ஆச்சரியம் அடைந்தேன்: கமலேஷ் நாகர்கோட்டி

  2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல்...