Cricket, India, Best ODI XI, Sachin Tendulkar, Virender Sehwag, Yuvraj Singh, Ms Dhoni, Kapil Dev, Zaheer Khan, Ajit Agarkar, Anil Kumble, Virat Kohli

ஒருநாள் போட்டியில் டாப் 10 சிறந்த தொடக்க ஜோடி: ஒருநாள் போட்டியில் ஆட்டத்தை துவக்குவது முக்கியமான ஒன்று. அவர்கள் ஆரம்பத்தில் அடிப்பதுதான் ஆட்டத்தையே தீர்மானிக்கும். அத்தகைய நிலையில் இருந்தும் சில வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 1990-இல் ஜெயசூரியா மற்றும் கலுவிதரனே ஆகியோர் பந்துகளை நாலாபக்கமும் பறக்க விட்டனர். சச்சின், கில்கிறிஸ்ட், கங்குலி, சேவாக் ஆகியோரும் எதிரணியை நொறுக்கினர். ஒருநாள் போட்டியில் டாப் 10 சிறந்த தொடக்க ஜோடியை பாப்போம்.

கிப்ஸ் & ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

கிப்ஸ் மற்றும் ஸ்மித், தென் அப்பிரிக்காவிற்கு சிறந்த தொடக்க ஜோடியாக இருந்தார்கள். கிப்ஸ் அடித்து ஆட, ஸ்மித் பொறுமையாக ஆட தென் ஆப்பிரிக்காவுக்கு சிறந்த ஜோடியாக இருந்தார்கள். அவர்கள் 74 இன்னிங்ஸில் 3007 ரன்ஸ் (சராசரி – 41.19), 8 சதமும், 13 அரைசதமும் அடித்துள்ளனர்.

டில்ஷான் & தரங்கா (இலங்கை)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

டில்ஷான் & தரங்கா இதுவரை 67 இன்னிங்க்ஸை தொடக்கிருக்கிறார்கள். அவர்கள் 3052 ரன்ஸ், அதாவது சராசரியாக 46.24 ரன்கள் மற்றும் 9 சதமும், 13 அரைசதமும் அடித்துள்ளனர். அவர்களது 282-ரன்கள், 2வது அதிக கூட்டு ஸ்கோராக இருக்கிறது.

ஜெயசூரியா & கலுவித்தரனா (இலங்கை)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

இவர்கள் இலங்கைக்கு சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்தார்கள். ஜெயசூரியா அடித்து ஆட, கலுவித்தரனா பொறுமையாக ஆடினார். இவர்கள் 105 இன்னிங்க்ஸை துவக்கி 3230 ரன்கள் அடித்து 6 சதம், 19 அரைசதமும் அடித்துள்ளனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து அதிகபட்சமாக 129 ரன்கள் அடித்துள்ளனர்.

அட்டப்பட்டு & ஜெயசூரியா (இலங்கை)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

கலுவித்தரனாவிற்கு பிறகு, தனக்கு இன்னொரு ஜோடியை பிடித்தார் ஜெயசூரியா. அவர் வேறு யாரும் இல்லை, நம் அட்டபட்டு தான். இவர்கள் இருவரும் சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை விளாசினார். இவர்கள் ஜோடி 79 இன்னிங்சில் 3382 ரன்கள், 8 சதம், 19 அரைசதம் அடித்துள்ளனர். இந்த ஜோடி அதிகமாக 237 ரன் அடித்துள்ளது.

பூன் & மார்ஷ் (ஆஸ்திரேலியா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

பூன் மற்றும் மார்ஷ் ஜோடி இதுவரை 88 இன்னிங்சில் 3528 ரன்கள் அடித்துள்ளனர். இவர்கள் சராசரியாக 40.03 ரன்களும், 7 சதம், 25 அரைசதம் அடித்துள்ளனர். இந்த ஜோடி அதிகபட்சமாக 212 ரன் அடித்துள்ளது.

கில்கிறிஸ்ட் & வாக் (ஆஸ்திரேலியா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

அடித்து ஆடி எதிரணியை நொறுக்க கூடும் ஜோடி இது. இந்த ஜோடி 93 இன்னிங்க்ஸை துவக்கி 3853 ரன்களும் 8 சதம் மற்றும் 20 அரைசதமும் அடித்துள்ளது. இவர்கள் அதிகபட்சமாக 206 ரன் சேர்த்துள்ளனர்.

சேவாக் & சச்சின் (இந்தியா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

எதிரணியை சின்னாபின்னம் ஆக்குவதில் இவர்கள் வல்லவர் என சொல்லலாம். இவர்கள் தான் சேவாக்-சச்சின். இந்த ஜோடி 2003 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி இந்தியா அணியை இறுதி போட்டிக்கு கொண்டு சென்றனர். சேவாக் தனது முதல் பந்திலிருந்தே அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். இந்த ஜோடி 93 இன்னிங்சில் 3919 ரங்களும் 12 சதம் மற்றும் 18 அரைசதம் அடித்துள்ளது. இவர்கள் கூட்டாக அதிகபட்சமாக 182 ரன் அடித்துள்ளனர்.

கிரீனிட்ஜ் & ஹெய்ன்ஸ் (மேற்கிந்திய தீவு)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

கிரீனிட்ஜ் மற்றும் ஹெய்ன்ஸ் ஜோடி மேற்கிந்திய தீவுக்காக 12 வருடமாக விளையாடி வந்தார்கள். இவர்கள் 102 இன்னிங்சில் 5150 ரன்கள், அதாவது சராசரியாக 52.55 ரன் அடித்துள்ளார்கள். இவர்கள் ஜோடியாக 18 சதமும், 24 அரைசதமும், அதிக பட்சமாக 192 ரன்கள் சேர்த்துள்ளார்கள்.

கில்கிறிஸ்ட் & ஹேடன் (ஆஸ்திரேலியா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

கில்கிறிஸ்ட் & ஹேடன், இவர்கள் கதை முடித்தால் தான் எதிரணிக்கு பிரச்சனை இல்லை. இல்லையென்றால் எதிரணியின் கதையை இவர்கள் முடித்து விடுவார்கள். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆட கூடிய ஜோடி.. 2003 & 2007 உலகக்கோப்பையை தட்டி செல்வதற்கு இவர்களும் ஒரு முக்கிய புள்ளியாய் இருந்தார்கள். இந்த ஜோடி 114 இன்னிங்சில் 5372 ரங்களும், 16 சதம், 29 அரைசதம் மற்றும் அதிகபட்சமாக 172 ரன் அடித்துள்ளனர்.

சச்சின் & கங்குலி (இந்தியா)

கிரிக்கெட், சிறந்த தொடக்க ஜோடி, டாப் 10, சச்சின், சேவாக், கங்குலி, கில்கிறிஸ்ட், ஹேடன், ஜெயசூரியா, தரங்கா, தில்ஷன்

இந்த வலது-இடது ஜோடி எதிரணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் பறக்கவிட்டது. கிரிக்கெட் விதியை மாற்ற பட்டபோது கங்குலி, பந்து வீச்சாளர்களை திணற விட்டார். இவர்கள் 136 முறை ஆட்டத்தை துவக்கிருக்கிறார்கள். இந்த ஜோடி 6609 ரன், 21 சதம், 23 அரைசதம் அடித்துள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *