1877ம் ஆண்டு உலகத்திற்கு அறிமுகமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சமீப காலமாக தனக்கான ரசிகர்களை இழந்து வருவதால் டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனால் டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வரும் 2021ம் ஆண்டு முதல் டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு நடத்தப்படும் உலக்க்கோப்பையை போல் டெஸ்ட் தொடருக்கும் உலகக்கோப்பை நடத்தப்படும் என்று ஐ.சி.சி., சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிகமுறை தோல்வி அடைந்துள்ள 10 அணிகள் பற்றி இங்கு பார்ப்போம்.
10. ஜிம்பாப்வே;
வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணி,1992ல் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திருப்பிய ஜிம்பாப்வே அணி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தோல்வியடைந்த டாப் 10 பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
இதுவரை மொத்த 105 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அணி, 11 போட்டிகளில் வெற்றியும், 105 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 27 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது.