டி.20 போட்டிகளில் அதிக ரன்; கோஹ்லியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித் சர்மா

சர்வதேச டி.20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோஹ்லியை ரோஹித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இந்தியா, ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி விராட் கோலியை முந்தினார். தற்போது 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், 20 ஓவர் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆனார் என்பது கூடுதல் தகவல்.

சர்வதேச டி.20 அரங்கில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள் பட்டியல்;

மார்டின் கப்டில் – 2271 ரன்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மார்டின் கப்தில் சர்வதேச டி.20 அரங்கில் 2271 ரன்கள் குவித்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா;

விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டி.20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி.20 அரங்கில் 2203 ரன்களை கடந்த ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

சோயிப் மாலிக் – 2190 ரன்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான சோயிப் மாலிக் 2190 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மெக்கெல்லம் – 2140  ரன்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிராண்டன் மெக்கல்லம் சர்வதேச டி.20 அரங்கில் 2140 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

 

விராட் கோஹ்லி -2102 ரன்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி 2102 ரன்கள் குவித்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

  • SHARE

  விவரம் காண

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை !!

  உலகக்கோப்பையில் நானும் விளையாடுவேன்; ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தான் இடம்பிடிப்பேன் என இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர்...

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் !!

  ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும்; அஜித் அகார்கர் விருப்பம் ஹர்திக் பாண்டியா விரைவில் அணிக்கு திரும்ப வேண்டுமென இந்திய அணியின் முன்னாள்...

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா !!

  விராட் கோஹ்லியின் சாதனையை காலி செய்த ஹசீம் ஆம்லா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 27 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட்...

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...