கிரிக்கெட்டில் டி20 போட்டியை அறிமுக படுத்திய பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக உள்ளதால், அடித்து விளையாடி ரன் சேர்க்க நினைப்பார்கள். இதனால், டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேனுக்கான போட்டி என்பார்கள். அதுவும் சரி தான் ! ஓவர்கள் குறைவாக உள்ளதால் ரன் சேர்க்க பவுண்டரி சிக்ஸர்களாக விளாசுவார்கள். இதன் மூலம், ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் வீரர்கள். இந்நிலையில், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்திருக்கும் முதல் 5 வீரர்களை பார்ப்போம்.
டேவிட் வார்னர் – 6
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்கவீரர் டேவிட் வார்னர் 238 டி20 போட்டிகளில் விளையாடி 7500 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, ஐபில், பிக் பாஷ் போன்ற விளையாடும் டேவிட் வார்னர் இதுவரை 6 சதம் அடித்திருக்கிறார்.
பிரண்டன் மெக்கல்லம் – 7
நியூஸிலாந்து அணியின் அட்டகாச வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் இது வரை டி20 கிரிக்கெட்டில் 7 சதம் அடித்திருக்கிறார். 309 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 8500 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறார். இவரது பலமே பந்தை பவுண்டரி கோட்டுக்கு அனுப்புவது தான்.
லுக் ரைட் – 7
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லுக் ரைட், இங்கிலாந்து, ஐபில் பிக் பாஷ் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். 282 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் டி20 கிரிக்கெட்டில் 7 சதம் அடித்திருக்கிறார்.
மைகேல் க்ளிங்ர் – 7
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மைகேல் க்ளிங்ர் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தான் யார் என உள்ளூர் டி20 தொடர்களில் நிரூபிக்கிறார். இதுவரை 156 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் இவர் 7 சதம் அடித்திருக்கிறார்.
கிறிஸ் கெய்ல் – 20
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக வளம் வருகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் இதுவரை 20 சதம் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.