இனியாச்சும் இவர கழட்டிவிடுங்க ப்ளீஸ்… தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரர் மீது ரசிகர்கள் கோவம் !! 1

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தொடர்ந்து வீணடித்து வரும் மணிஷ் பாண்டே நெட்டிசன்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இனியாச்சும் இவர கழட்டிவிடுங்க ப்ளீஸ்… தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரர் மீது ரசிகர்கள் கோவம் !! 2

கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தவான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதாலும், கடந்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் இன்றைய போட்டிக்கான இந்திய அணி 6 மாற்றங்களுடன் களமிறங்கியது, இதில் ஐந்து பேர் அறிமுக வீரர்கள்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ப்ரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இனியாச்சும் இவர கழட்டிவிடுங்க ப்ளீஸ்… தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரர் மீது ரசிகர்கள் கோவம் !! 3

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் 225 ரன்களுக்கே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அகிலா தனன்ஞனயா மற்றும் பிரவீன் ஜெயவிக்ரமே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இனியாச்சும் இவர கழட்டிவிடுங்க ப்ளீஸ்… தொடர்ந்து சொதப்பும் சீனியர் வீரர் மீது ரசிகர்கள் கோவம் !! 4

இந்தநிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் மணிஷ் பாண்டே சமூக வலைதளங்களில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இனியாவது இந்திய அணி இவரை நீக்கிவிட்டு இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *