பஞ்சாப்பை வீழ்த்தி வரலாறு படைத்த ராஜஸ்தான்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 1

பஞ்சாப்பை வீழ்த்தி வரலாறு படைத்த ராஜஸ்தான்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்

பஞ்சாப் அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப்பை வீழ்த்தி வரலாறு படைத்த ராஜஸ்தான்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மாயன்க் அகர்வால் 106 ரன்களும், கே.எல் ராகுல் 69 ரன்களும் எடுத்து கொடுத்து மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பின்வரிசையில் வந்த வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய பட்லர் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

பஞ்சாப்பை வீழ்த்தி வரலாறு படைத்த ராஜஸ்தான்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – சஞ்சு சாம்சன் கூட்டணி எங்களுக்கும் அதிரடியாக விளையாட தெரியும் என்பது போல பஞ்சாப்பின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து பவர்ப்ளே முடிவதற்குள் 69 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 85 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அதிரடியாக விளையாடிய இருவரும் விக்கெட்டை இழந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் வீரர் ஷெல்டன் கார்டல் வீசிய ஓவரின் ஐந்து பந்துகளை சிக்ஸர் பறக்கவிட்டு திவேட்டியா போட்டியில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிகப்பெரும் வரலாறு படைத்துள்ளது.

பஞ்சாப்பை வீழ்த்தி வரலாறு படைத்த ராஜஸ்தான்; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 4

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசாத்திய வெற்றியை பதிவு செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் சில இங்கே;

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *