ஈசியாக இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் படை; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 1
India's Kuldeep Yadav (C) celebrates after the dismissal of Sri Lanka's Minod Bhanuka (not pictured) during the first one-day international (ODI) cricket match between Sri Lanka and India at the R.Premadasa Stadium in Colombo on July 18, 2021. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசால்டாக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஈசியாக இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் படை; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

ஈசியாக இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் படை; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 3

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஈசியாக இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் படை; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 4

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஈசியாக இலங்கையை வீழ்த்திய இந்திய இளம் படை; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 5

இலங்கை அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

இந்தநிலையில், இலங்கை அணியை மிக இலகுவாக வீழ்த்திய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமான ஷிகர் தவான், இஷான் கிஷன், ப்ரித்வி ஷா போன்ற வீரர்களை பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *