இது வின்டேஜ் தல.... கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!! 1
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். கோலி விரைவில் அவுட்டானார்.
இது வின்டேஜ் தல.... கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!! 2
அந்த அணியின் டிவில்லியர்ஸ் – டி காக் ஜோடி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டது. சிறப்பாக விளையாடிய இரண்டு பேட்ஸ்மேன்களும் அரைசதம் கடந்தனர். டி காக் 37 பந்தில் 53 ரன்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. அவரைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் 30 பந்தில் 68 ரன்கள் (2 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
சென்னை அணி சார்பில் சர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், அம்பதி ராயுடுவும் இறங்கினர். வாட்சன் முதல் ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ஜடேஜா ஆகியோர் விரைவில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் தோனி  ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் பெங்களூர் அணியினரின் பந்து வீச்சை சிக்சர், பவுண்டரியாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ராயுடு 82 ரன்களில் அவுட்டானார். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. தோனி ஆட்டமிழக்காமல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பெங்களூர் அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், நெகி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

https://twitter.com/chaudhari_meh/status/989209292703068161

https://twitter.com/TheShobhitAzad/status/989209241238974464

https://twitter.com/navihere00/status/989209809273565184

https://twitter.com/iPriyankaBhatt/status/989209805352001537

https://twitter.com/Mselvam34Muthu/status/989209118589120512

https://twitter.com/liteshgawande/status/989209074200854528

https://twitter.com/imdhoni7/status/989211216588558339

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *